ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கியதை அடுத்து நடிகர் விஷாலும் அரசியல் கட்சியை துவங்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதன் முன்னோட்டமாக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றும் வேலைகளில் உள்ளார். அரசியல் கட்சி தொடர்பாக விஷால் வெளியிட்ட அறிக்கை :
சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக அங்கீகாரம் அளித்த தமிழக மக்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன். ஆரம்பம் முதலே "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் எனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம். அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்க்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்கிறோம்.
நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை. "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருப்பேன். அது என்னோட கடமை. தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விஷால் தனது அறிக்கையில் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொல்லவில்லை. மாறாக, ‛‛இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்'' என சொல்லியிருக்கிறார். இதன்மூலம் கண்டிப்பாக அவரும் அரசியலில் களமிறங்குவார் என்பதே அவரின் வெளிப்பாடு.