ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
2024ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் வெளிவந்த படங்களில் 'அயலான், கேப்டன் மில்லர், ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன்' ஆகிய படங்கள் வெற்றிகரமாக ஓடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், திரையுலக வட்டாரங்களில் விசாரித்தால் அப்படங்கள் லாபத்தைத் தருவதைக் காட்டிலும் 'லாஸ்'ஐத்தான் தரும் என்கிறார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்து ஓடி முடித்த போது நஷ்டக் கணக்கே வரும் என்பதுதான் அவர்கள் சொல்லும் தகவல்.
இந்நிலையில் இந்த வாரம் பிப்ரவரி 9ம் தேதி ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம்', மணிகண்டன் நடித்துள்ள 'லவ்வர்', அசோக் நடித்துள்ள 'ஈ மெயில்' ஆகிய படங்கள் தியேட்டர்களிலும், பரத், ஜனனி ஐயர் நடித்துள்ள 'இப்படிக்கு காதல்' படம் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.
'லால் சலாம்' படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தாலும் படத்தில் அவர் அரை மணி நேரம் வரை வருகிறார் என்று சொல்கிறார்கள். படத்தின் போஸ்டர்களிலும் அவர்தான் பிரதானமாக உள்ளார். ரஜினிகாந்த் நடித்து கடந்த வருடம் வந்த 'ஜெயிலர்' படம் 600 கோடி வசூலைக் குவித்தது. அப்படம் வந்து சரியாக ஆறு மாதங்கள் கழித்து மற்றொரு ரஜினி படம் வருகிறது.
தியேட்டர்களுக்கு முதல் நாள் முதல் காட்சியிலேயே ரசிகர்களை அதிகமாக வரவழைப்பதை ஆரம்பித்து வைத்ததே ரஜினிகாந்த் தான். அதனால், இந்த ஆண்டின் ஆரம்ப மாதமான ஜனவரி மாதத்தின் நஷ்டத்தை சரிப்படுத்தும் விதத்தில் 'லால் சலாம்' படம் லாபத்தைத் தருமா என திரையுலகினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.