ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் தற்போது 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த அதிரடி படமாக தயாராகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் அஜர்பைஜானில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் தற்போது விடாமுயற்சி அடுத்தகட்ட படப்பிடிப்பை விரைவில் ஜார்ஜியாவில் உள்ள டிபிலிசி என்கிற பகுதியில் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை முடித்த பின் சென்னை, ஐதராபாத்திலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.