9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான பூனம் பாண்டே இறந்ததாக நேற்று அவருடைய சமூக வலைத்தளத்திலேயே அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த மறைவுச் செய்திக்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்திருந்தார்கள். ஊடகங்கள் அனைத்துமே அவரது இறப்புச் செய்தியை வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் சற்று முன் பூனம் பாண்டே, நான் உயிருடன் தான் இருக்கிறேன், கர்ப்பப்பை புற்று நோயால் இறக்கவில்லை, அந்த நோயை குணப்படுத்த முடியும் என்று சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதற்கடுத்த வீடியோ ஒன்றில் அந்நோய் பற்றிய விழிப்புணர்வுக்காகவே தான் இறந்ததாகச் சொன்னதாகவும் கூறியுள்ளார்.
விழிப்புணர்வுக்காக இப்படியெல்லாமா செய்வது என கமெண்ட் பகுதியில் பலரும் அவரை விதவிதமாகத் திட்டி வருகிறார்கள்.