‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது ஹிந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகிறார் . அட்லீ தயாரிக்கும் இந்த படத்தை கலீஷ் என்பவர் இயக்குகிறார். தெறி படத்தில் தமிழில் சமந்தா நடித்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். சமீபத்தில் இப்படத்தில் பூஜை நடைபெற்றது. மேலும், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது பிறந்த நாளில் ரசிகர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடி வருகிறார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் கிருஷ்ணா என்ற ஒரு ரசிகர் 234 நாட்களாக இடைவிடாமல் ட்வீட் போட்டு ரிப்ளை செய்யுமாறு வேண்டுகோள் வைத்து வந்திருக்கிறார். அவரது பதிவை 234 வது நாளில் பார்த்த கீர்த்தி சுரேஷ், அவருக்கு பதில் கொடுத்து இருக்கிறார். அந்த பதிவில், 234, இது மிகவும் பேன்ஸியான நம்பர். உங்களுக்கு தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களை அதிகம் நேசிக்கிறேன் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.




