போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தர்ஷன் | உபாசனா நடிக்கும் 'எனை சுடும் பனி' | பிளாஷ்பேக் : பிரபு, கார்த்திக் நடிக்க மறுத்த படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : உலக போர், சென்னை மாகாணத்தை கிண்டல் செய்த படம் | ஒரு இடைவெளிக்குத் தயாராகும் தமிழ் சினிமா | 'டிராகன்' படத்தில் ஐந்து இயக்குனர்கள் | அதிக பணம் கொடுத்து தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள் | சிரஞ்சீவிக்கு 'யுகே' பார்லிமென்ட்டில் பாராட்டு | ஹிந்தி படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய தனுஷ் | 'லியோ' கதைதான் 'குட் பேட் அக்லி' கதையா? |
மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராக மாறிவிட்ட டொவினோ தாமஸ் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியான நடிகராக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஒரு படம் தான் 'நடிகர் திலகம்'. சுமார் நாற்பது கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை வில்லன் நடிகர் லாலின் மகனும், இயக்குனருமான ஜீன்பால் லால் (லால் ஜூனியர்) இயக்கி வருகிறார்.
நடிகர் திலகம் என்றாலே அது சிவாஜி கணேசன் தான். அப்படிப்பட்டவருக்கு மட்டுமே சொந்தமான அடைமொழியை மலையாளத்தில் ஒரு படத்திற்கு ஒரு டைட்டிலாக வைத்து இருக்கிறார்கள் என்கிற செய்தி இங்கே தமிழகத்தின் தெரிய வந்ததும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவையை சேர்ந்த சிவாஜியின் தீவிர ரசிகர்கள் இந்த படத்தின் டைட்டிலை வைக்கக் கூடாது என்றும் வேறு டைட்டிலை மாற்றுங்கள் என்றும் படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதினர்.
மேலும் இது குறித்து நடிகர் பிரபுவின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். தனது தந்தையின் நடிகர் திலகம் பட்டத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதை பிரபுவும் விரும்பவில்லை. இதை தொடர்ந்து தனது நண்பரும், வில்லன் நடிகருமான லாலை அழைத்து தனது எண்ணத்தை அவரிடம் தெரிவித்து படத்தின் இயக்குனரான அவர் மகனிடம் கூறி டைட்டிலை மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார். படத்திற்கு இந்த டைட்டில் பொருத்தமானது என்றாலும் கூட மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்த கோரிக்கை என்பதால் அதை தட்ட விரும்பாமல் தற்போது இந்தப்படத்திற்கு நடிகர் என்று மட்டுமே டைட்டிலை மாற்றி வைத்துள்ளார்கள்.
மேலும் இந்த தகவலை நடிகர் பிரபுவுக்கு தெரிவித்து நீங்களே கேரளா வந்து இந்த படத்தின் டைட்டிலை வெளியிடுங்கள் என சிறப்பு விருந்தினராகவும் அவருக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு விழாவில் நேரில் கலந்து கொண்ட பிரபு, இந்த படத்தின் டைட்டிலை அறிவித்தார். மேலும் கேரள ரசிகர்கள் எப்போதுமே தன் தந்தையின் மீது காட்டி வரும் அன்பு குறித்து நெகிழ்ந்து போய் பேசிய பிரபு, தனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக படக்குழுவினருக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.