'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர தொடர் 'சந்தியா ராகம்'. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. நேற்று முதல் இந்த நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தாரா சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. தாரா தனிப்பட்ட காரணங்களுக்கு விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் சந்தியா ஜாகர்லமுடி, அந்தரா ஸ்வர்ணகர், ராஜீவ் பரமேஸ்வர், சுர்ஜித் குமார், அக்ஷயராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரம்மா தேவன், என்.பிரியன் இயக்குகிறார்கள்.