2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தென்னிந்தியாவி்ல் மொழிக்கு பல சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக ரஜினி கொண்டாடப்படுகிறார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் 'பிக் பி' என்று அழைக்கப்படுகிறார், ஷாருக்கான், சல்மான்கான், ஆமீர்கான் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் இனி சூப்பர் ஸ்டார்கள் யாரும் வரப்போவதில்லை என்று பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் ஆமிர் கான் ஆகிய மூன்று கான்களுக்குப் பிறகான தலைமுறையில் 'சூப்பர் ஸ்டார்' என்ற கருத்துருவாக்கம் இல்லாமல் போகலாம். என்னைப் பொறுத்தவரை இந்த மூன்று கான்களுக்கு பிறகு 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் இருக்கப் போவதில்லை. அந்த வார்த்தைகூட இருக்காது.
இதுவரை பிரபலம் என்று அறியப்படுபவர்கள் திரைப்பட நட்சத்திரங்களாகவும், கிரிக்கெட் வீரர்களாகவும் இருந்தார்கள். ஆனால், இன்று இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்கள், பேஷன் இன்ப்ளூயன்சர்கள் தான் பிரபலங்களாக அறியப்படுகிறார்கள். ஷாருக், சல்மான், ஆமிர், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், கரீனா கபூர், ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோருக்கு நாடு முழுவதும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இன்றைய தலைமுறையில் அப்படியான ஒரு ரசிக மனப்பான்மையை உருவாக்குவது மிகவும் கடினம். ஒவ்வொரு நடிகர், நடிகைளுக்கும் தனி ரசிகர்கள் இருப்பது இனி சந்தேகம்தான் என்று கூறியுள்ளார்.