தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? |
இந்த ஆண்டின் 3வது வெள்ளிக்கிழமையான இன்று புதிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இது ஒரு அபூர்வ நிகழ்வாகும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சேப்டர் 1, மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளிவந்தன. நான்குமே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் வசூலின் அடிப்படையில் 'அயலான்' முதலிடத்தில் இருக்கிறது. பண்டிகை கால படங்கள் ஒரு வாரத்தையும் தாண்டி ஓடும் என்பதால் அதற்கு அடுத்த வாரத்தில் படங்கள் எதுவும் வெளிவராது என்பது நடைமுறையில் இயல்பாக உள்ளது. என்றாலும் சில சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகும். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் வெளிவரவில்லை.
இதற்கு காரணம் அயலான், கேப்டன் மில்லர் படங்கள் ஏராளமான தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டது. விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'மிஷன் சேப்டர் 1' படத்திற்கே போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று அதன் இயக்குனர் ஏ.எல்.விஜய் பகிரங்கமாகே கூறியிருந்தார். இந்த நிலையில் வெளியாக தயாராக இருந்தும் சில சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காததால் இந்த வாரம் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.
அடுத்த வாரம் சிங்கப்பூர் சலூன், புளூ ஸ்டார், முடக்கறுத்தான், நியதி, த.நா ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.