22வது புனே சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. வருகிற 25ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் தமிழில் தயாராகி உள்ள 'காதல் என்பது பொதுவுடைமை' படம் இன்றும் (19ம் தேதி) வருகிற 21ம் தேதியும் திரையிடப்படுகிறது. ஏற்கெனவே இந்த படம் கோவாவில் நடந்த இந்தியன் பனோரமா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை லென்ஸ், தலைக்கூத்தல், மஸ்கிடோபிலாசபி படங்களை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார். இதில் லிஜோ மோல், ரோகிணி, மொலேட்டி, வினீத், ராதாகிருஷ்ணன், கலேஷ் ராம் ஆனந்த், அனுஷா மற்றும் தீபா நடித்துள்ளனர்.
ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். லெஸ்பியன் காதல் கதையாக படம் உருவாகி உள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் தியேட்டர்களில் வெளியாகிறது.