நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கும் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் விஷால். அதில், ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஒரே ஷாட்டில் ஐந்து நிமிடம் கொண்ட ஒரு சண்டை காட்சியையும் சேஸிங் காட்சியையும் படமாக்கப்போவதாக அவரிடத்தில் சொல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
அதையடுத்து இப்போது ரத்னம் படத்தில் இருந்து இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார் விஷால். அதில், ஒயின்ஷாப் மாதிரியான ஷெட் முன்பு மது பிரியர்கள் கூட்டமாக நின்று வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கே வரும் விஷால், ‛‛அதான் ஒயின்ஷாப் விடுமுறை என்று போர்டு மாட்டியுள்ளார்களே. பிறகு எதற்காக பிரச்னை செய்கிறீர்கள்? என்று...'' அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பது போல் அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது.