நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'விடாமுயற்சி'. புத்தாண்டு, பொங்கல் என இந்தப் படத்திற்காக அப்டேட்டுகளை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் கத்திருந்தார்கள். விஜய் நடிக்கும் 'கோட்', சூர்யா நடிக்கும் 'கங்குவா' படங்களுக்கு வந்த பொங்கல் அப்டேட் 'விடாமுயற்சி' படத்திற்கு வரவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஓடிடி பற்றிய அப்டேட்டைக் கொடுத்திருக்கிறார்கள்.
படம் தியேட்டர்களில் வெளியான பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது மட்டும்தான் அப்டேட்டே வேறு இல்லையா என அஜித் ரசிகர்கள் அதில் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு போஸ்டரையாவது வெளியிட்டிருக்கலாமே என அஜித் ரசிகர்கள் நிறைய ஆதங்கத்துடன் உள்ளனர்.
விஜய் நடித்து வரும் 'கோட்' படத்திற்கு இதுவரையில் மூன்று போஸ்டர்களை வெளியிட்டுவிட்டார்கள். பொங்கல் அப்டேட்டாக 'கோட் ஸ்குவாடு' என்ற மூன்றாவது போஸ்டரை வெளியிட்டார்கள்.