டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தென்னாடு சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'சென்னை பிரணயம்' என்ற திரைப்படத்தின் பைலட் மூவி தயாராகியுள்ளது. இந்த படத்தை மறைந்த டைரக்டர் பாலு மகேந்திராவின் மாணவர் சதீஷ்பாபு இயக்குகிறார். சதீஷ்பாபுவின் முதல்படமான 'சென்னை பிரணயம்' படம் பைக் காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் தயாராகிவருகிறது.
கதையில் கேரளாவில் உள்ள கதாநாயகியை தேடி, கதாநாயகன் பைக்கில் கேரளாவிற்கு செல்கிறார். இருவருக்கும் இடையே பழக்கம் மற்றும் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்தும், எப்படி பிரிந்தனர் என விறு விறுப்பாக கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் கதாநாயகனாக ராஜாவும், கதாநாயகியாக நீமா ரோசாவும் நடிக்கின்றனர்.

படத்தின் கேமராமேனாக தினேஷ்குமாரும், எடிட்டராக தாமோதரனும், இசையமைப்பாளராக ரகுநாத்தும் பணிபுரிந்துள்ளனர். சந்தோஷ் படத்தின் போஸ்டரை வடிவமைத்துள்ளார். ஜான் கென்னடி சவுண்ட் மிக்ஸிங் செய்துள்ளார். மலையாள நடிகர்கள் பிஜூமேனன், பிரதீப் நடித்துள்ளனர்.
சென்னை பிரணயம் படத்தின் 'பைலட் மூவி' திரையிடும் நிகழ்ச்சி சென்னை ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடந்தது. நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர் மணிகண்டன், தயாரிப்பாளர் ஞானசேகர், டைரக்டர் நாஞ்சில் அன்பழகன், தினமலர் நெல்லை நிர்வாக இயக்குனர் தினேஷ், படத்தின் கதாநாயகன் ராஜா, கதாநாயகி நீமா ரோசா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை டைரக்டரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் மதன்பாப் தனித்தனியாக வெளியிட்டனர்.




