அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
பொங்கல் போட்டியாக தமிழிலும், தெலுங்கிலும் சில பல படங்கள் வெளியாகின்றன. தமிழில் தயாரான இரண்டு முக்கிய படங்களான 'கேப்டன் மில்லர், அயலான்' ஆகிய இரண்டு படங்களையும் தெலுங்கில் டப்பிங் செய்து தமிழில் வெளியாகும் அதே ஜனவரி 12ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால், நேரடித் தெலுங்குப் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு திரையுலகத்தின் சில முக்கிய புள்ளிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுத்தம் கொடுத்து சர்ச்சையை உருவாக்கினர். அதன் காரணமாக 'கேப்டன் மில்லர், அயலான்' ஆகிய இரண்டு தெலுங்குப் படங்களின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். இதனால், 'கேப்டன் மில்லர்' படத்தின் தெலுங்கு டிரைலரைக் கூட வெளியிடவில்லை.
தமிழ்ப் படங்களுக்கு தெலுங்கு மாநிலங்களில் இப்படி எதிர்ப்பு உள்ள நிலையில் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் மட்டும் ஐதராபாத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால், தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்கள் மட்டுமே பலனடைகிறார்கள். இங்கு படப்பிடிப்பு நடத்தாத காரணத்தால் தமிழ் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.
இது குறித்து தமிழ் சினிமா உலகில் உள்ள எந்த ஒரு சங்கமும் அவர்களது கருத்துக்களை வெளியிடுவதில்லை. சில தயாரிப்பாளர்கள் இரண்டு மொழிகளிலும் படங்களைத் தயாரிப்பது, வெளியிடுவது என இருக்கிறார்கள். சில நடிகர்கள் இரண்டு மொழிகளிலும் நடிக்கிறார்கள். சில இயக்குனர்கள் இரண்டு மொழிகளிலும் இயக்குகிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தின் இத்தகையே போக்கை அவர்கள் கண்டித்தால் அங்கு சென்று வேலை செய்ய முடியாது. எனவே, அவர்கள் இந்த சர்ச்சையை அமைதியாகக் கடந்து போகிறார்கள்.
'கேப்டன் மில்லர், அயலான்' படங்கள் வெற்றி பெற்றால் பரவாயில்லை, மாறாக, தோல்வியடைந்தால், தெலுங்கில் அந்தப் படங்களை வெளியிட முடியாத சூழலே உருவாகும். தமிழ்ப் படங்கள் அங்கு வெளியாகவில்லை என்றாலும் பரவாயில்லை தெலுங்குப் படமான 'ஹனு மான்' படத்தை இங்கு வெளியிடுவோம் என அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.