ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மறைந்த இயக்குனர் ராசு.மதுரவன் இயக்கி இருந்த படம் 'மாயாண்டி குடும்பத்தார்' கடந்த 2009ம் ஆண்டு வெளியான இந்த படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சீமான், தருண் கோபி, சிங்கம் புலி, மயில்சாமி, மணிவண்ணன், பொன்வண்ணன், ரவிமரியா, பூங்கொடி, புனிதா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாலபரணி ஒளிப்பதிவு செய்திருந்தார், சபேஷ் முரளி இசை அமைத்திருந்தனர்.
அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான குடும்ப சண்டையும், பங்காளி பகையும் ஒரு கட்டத்தில் அன்பால் இணைவது மாதிரியான கதை. சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதில் இரண்டாம் பரிசையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் 2ம் பாகத்தையும் தயாரிக்க உள்ளதாகவும், கதை, திரைக்கதை வசனம் எழுதி கே.பி.ஜெகன் படத்தை இயக்க உள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் பாகத்தில் நடித்தவர்களில் மணிவண்ணன் தற்போது உயிருடன் இல்லை. அவர்தான் குடும்பத்தின் தலைவர் மாயாண்டியாக நடித்திருந்தார். தற்போது அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் ராஜ்கிரணை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகிறார்கள்.