நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2கே புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள படம் 'ஜெர்க்'. அப்புகுட்டி, நாடோடிகள் பரணி, குமரவடிவேல், பிராங் ஸ்டார் ராகுல், காயத்ரி, யாத்திசை படத்தில் நடித்த சித்து குமரேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மற்றும் குட்டி கோபி, பிராங் ஸ்டார் அசார், பிரேமா, சூப்பர்குட் சுப்ரமணி, ராஜ்குமார், பழனிச்சாமி ஆகியோரும் நடித்துள்ளனர். ஆலன் பரத் ஒளிப்பதிவு செய்துள்ளார், தரண் குமார் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் குரு கூறும்போது "மலைப் பிரதேசங்களில் இயற்கை வளத்தையும், நம் மண்ணையும், பல தலைமுறைகளாக தங்களது உழைப்பால் பாதுகாத்து வரும் மக்கள் முதலாளித்துவத்தால் இன்று வரை அடிமைபட்டுத்தான் கிடக்கிறார்கள். அவர்களது முன்னேற்றம் இன்றுவரை கேள்விக் குறியாக இருக்கிறது.
அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத் தொடர்பே இல்லாத தமிழகத்தின் ஒரு முக்கியமான மலைபிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு முழுவதையும் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த மலைப்பகுதியில் நடத்தியிருக்கிறோம். என்றார்.