ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் பின்னர் அவரை விவாகரத்து செய்தார். விவாகரத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். ஆனால் முன்பு போன்று அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. சொந்தமாக படம் தயாரித்து பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்தித்தார். இடையில் இந்துஸ்தானி பாடகர் ஒருவருடன் லிவிங் டூ கெதராக வாழ்ந்தவர் பின்னர் அவரை விட்டும் பிரிந்தார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 26ம் தேதி பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாயை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஒரே வாரத்தில் அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. குடும்பத்தினர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகும் நிலையில், தற்போது அமலா பால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுளார். தனது வயிற்றில் குழந்தை வளர்வதை காட்டுவது போன்றும், காதலனுக்குள் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கும் படம் ஒன்றையும் வெளியிட்டு 'ஒன் பிளஸ் ஒன் =த்ரி' என தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




