நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஆங்கில புத்தாண்டை திரையுலக பிரபலங்கள் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நாடுகளில் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அது குறித்த புகைப்படங்களையும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுக்காக வெளியிட்டும் உள்ளனர். அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் இந்த வருட புத்தாண்டை தனது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும் விதமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
காரணம் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது தந்தை கமல், தனது காதலர் சாந்தனு, தனது சகோதரி சுகாசினி மற்றும் அவரது கணவர் இயக்குனர் மணிரத்னம் என தனது நெருங்கிய குடும்ப உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான சில புகைப்படங்களையும் அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
இவர்கள் தவிர நடிகை லிசி உள்ளிட்ட இவர்களுக்கு நெருக்கமான சில திரையுலக பிரபலங்களும் இந்த புத்தாண்டு பார்ட்டியில் இவர்களுடன் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.