சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ், தெலுங்கு, மலையாளம் என, மூன்று மொழிகளிலும், ரவுண்டு கட்டி அடிக்கிறார், அமலா பால். மூன்று மொழிகளிலுமே, தொடர்ச்சியாக படப் பிடிப்புகளில், பங்கேற்க வேண்டியிருப்பதால், உள்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும், அவ்வப்போது, விமானத்தில் பறப்பது, அவருக்கு வாடிக்கையாகி விட்டது.தெலுங்கு படப் பிடிப்புக்காக, சமீபத்தில், ஸ்பெயினுக்கு சென்றிருந்த அமலா பால், அந்த படப் பிடிப்பை முடித்து விட்டு, தமிழ் படப் பிடிப்பில் பங்கேற்பதற்காக, அங்கிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு, விமானத்தில் பயணித்தார்.அதே விமானத்தில், நடிகர் சந்தானமும் பயணித்தாராம். விமான பயணம் போரடிக்குமே என நினைத்துக் கொண்டிருந்த, அமலா பாலுக்கு, சந்தானத்தை பார்த்ததும், அந்த கவலை மறந்து விட்டதாம். அப்புறம் என்ன? இருவரும், ஜாலியாக, ஒருவரை ஒருவர், கலாய்த்தபடியே, விமானத்தில் பயணிக்க, நேரம் போனதே தெரியவில்லையாம்.