'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
தமிழ் சினிமாவில் தூரத்து இடி முழக்கம் என்ற படத்தில் அறிமுகமான விஜயகாந்த் 157 படங்களில் நடித்துள்ளார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவரானார். அரசியலில் பெரிய இடத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்த், உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் அவரது மனைவியான பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவின் பொதுச் செயலாளராக ஆனார். இந்த நிலையில், விஜயகாந்தின் தாய் உள்ளம் குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அது குறித்து அவர் அளித்த பேட்டியில், விஜயகாந்த் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மற்றவர்களின் இலையில் சாப்பாடு இல்லை என்றால் உடனே அவர்களுக்கு சாப்பாடு வைக்குமாறு கூறுவார். என்னை அழைத்து அவரது பக்கத்தில் உட்கார வைத்து சாப்பாடு கொடுப்பார். அவரது ரசிகர்கள், கட்சிக்காரர்கள் வீட்டில் இருந்து உணவு என அனைத்தும் அவர் அருகில் இருக்கும். பெரிய கரண்டியில் எனக்கு மட்டன் அள்ளி வைப்பார். எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு முடித்து விட்டால் மயக்கம் வருவது போல் இருக்கும். அப்போது ஒரு பெரிய டம்ளரில் பாயாசத்தை கொண்டு வந்து குடிக்கும்படி சொல்லுவார் விஜயகாந்த். அதை வாங்கி குடித்தால் தூக்கம் வந்துவிடும் என்று சொல்லுவேன். அப்போது இயக்குனரை அழைத்து, பாஸ்கர் நன்றாக தூங்கிவிட்டு நான்கரை மணிக்கு வரட்டும். அதுவரைக்கும் நான் இடம்பெறும் காட்சிகளை படமாக்குங்கள் என்று கூறுவார். இப்படி ஒரு தாயை போன்று பார்க்கக் கூடியவர் தான் விஜயகாந்த். உணவு பரிமாறுவதிலும் பாசம் காட்டுவதிலும் ஒரு தாய்க்கு நிகரானவர் என்று அந்த பேட்டியில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.