ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
பிளான் பண்ணி பண்ணனும், சோட்டா படங்களில் நடித்தவர் பூர்ணிமா ரவி. சமீபத்தில் வெளிவந்த அன்னபூரணி படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். தற்போது பிக் பாஸ் 7வது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் பூர்ணிமா நடித்த 'செவப்பி' என்ற படம் ஆஹா ஓடிடி தளத்தில் வருகிற ஜனவரி 12ம் தேதி நேரடியாக வெளியாகிறது. இந்த படத்தை எம்.எஸ்.ராஜா இயக்கி உள்ளார். மாஸ்டர் ரிஷிகாந்த், ராஜாமணி பாட்டி, ஷ்ரவன் அத்வேதன், டில்லி, செபாஸ்டியன் ஆண்டனி உள்பட பலர் நடித்துள்ளனர். மனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் குமார் இசை அமைத்துள்ளார். ராஜேஷ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் எம்.எஸ்.ராஜா கூறியதாவது: 1990 களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. அச்சிறுவன் ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான். ஒரு தந்தை தன் குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பை போல அந்தக் கோழியை பாதுகாப்போடும் நேசத்தோடும் அச்சிறுவன் வளர்க்கிறான்.
ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது இதனால் இரு தரப்பினர்கள் ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து வாழும் அந்த கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. இறுதியில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? கிராம மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் கதை. கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் முழு கதையும் வெறும் 27 நாட்களில் படமாக்கப்பட்டது. என்றார்.