அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளிவந்தது. அதன்பிறகு அவர் அஜித் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. அந்த படம் டிராப் ஆனது. இந்த நிலையில் அவர் இயக்கும் அடுத்த படம் 'எல்ஐசி' (லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன்). இந்த படத்தில் 'லவ்டுடே' மூலம் புகழ்பெற்ற பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு நடிக்கிறார்கள். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. இரண்டு கட்டங்களாக படத்தை முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த படம் விக்னேஷ் சிவனின் பேவரைட் ஜார்னரான காதலர்களுக்கு இடையிலான ஈகோவால் ஏற்படும் ஊடல், பிரிவு, சேர்வு தொடர்பான காமெடி படம் என்கிறார்கள். இதில் எஸ்.ஜே.சூர்யா கிரித்தி ஷெட்டியின் தந்தையாகவும், யோகிபாபு பிரதீபின் நண்பனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.