மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
சிவகார்த்தியேன் நடித்துள்ள படம் 'அயலான்'. அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 12ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான புரமோசன் பணிகள் தொடங்கி உள்ளது.
இதேபோல், வைபவ், பார்வதி நாயர், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்த 'ஆலம்பனா ' படமும் பணிகள் முடிந்து கடந்த 2 வருடங்களாக வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக இந்த படம் இன்று வெளியாவதாக இருந்தது.
அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களுக்குத் தரவேண்டிய 14.70 கோடி ரூபாய் நிலுவைத் தொகையைத் தரவில்லை என்று கூறி டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நிலுவைத் தொகையை செலுத்தும் வரை அயலான், ஆலம்பனா படங்களை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டி.ஆர்.எஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் வாதத்தில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனால் இன்று வெளியாவதாக இருந்த 'ஆலம்பனா' படம் வெளியாகவில்லை.