சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு |

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் கிளின்ட் ஈஸ்ட்வுட். கடந்த 70 வருடங்களாக திரைப்பட இயக்குனராகவும், கதாநாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது 93 வயதாகும் கிளின்ட் ஈஸ்ட்வுட், 'ஜுரோர் 2' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் அவரது ரசிகராக ராகவா லாரன்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார். படத்தில் அனிமேஷன் மூலம் கிளின்ட் ஈஸ்ட்வுட்டையும் படத்தில் சேர்த்திருந்தார்கள்.
அது குறித்து ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட்டை 'டேக்' செய்து பதிவிட்டிருந்தார். அதற்கு கிளின்ட் தரப்பிலிருந்து, “கிளின்ட் இந்தப் படம் பற்றி அறிந்துள்ளார். அவர் தற்போது உருவாக்கி வரும் 'ஜுரோர் 2' படத்தின் வேலைகள் முடிந்தபின் படத்தைப் பார்ப்பார்,” என்று பதிலளித்திருந்தார்கள்.
அந்தப் பதிவு படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “வாவ்…. கனவாக உள்ளது. இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் சார்பாக, கிளினிட் ஈஸ்ட்வுட்டிற்கு இந்தப் படம் எனது மனம் கவர்ந்த சமர்ப்பணம். படத்தை பார்த்தபின் அவர் என்ன நினைக்கிறார் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன்,” என கார்த்திக் சுப்பராஜ் குறிப்பிட்டுள்ளார். ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா ஆகியோரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்கள்.




