ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! |

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் 2024 பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை இதிலிருந்து டீசர், முதல் பாடல் வெளியானதைத் தொடர்ந்து இப்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை 2024 ஜனவரி 3ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.