'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'சலார்' படம் வரும் டிசம்பர் 22ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. ஒரு வாரம் முன்னதாக 5 மொழிகளில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஐந்து மொழிகளிலும் சேர்த்து 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்திற்கான தணிக்கையும் முடிவடைந்து 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் இருப்பதால் அந்த சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதனால் 18 வயதுக்கும் கீழானவர்கள் இப்படத்தைத் தியேட்டர்களில் பார்க்க முடியாது. இப்படம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகும் பல பெரிய படங்கள் ஏறக்குறைய 3 மணி நேரம் வரை இருக்கிறது. இது சில படங்களுக்கு ஒரு குறையாகவே அமைகிறது. இப்படத்திற்கு எப்படி அமையப் போகிறது என்பது படம் வந்த பிறகே தெரியும்.
இந்த ஆண்டு வெளியாகி அதிக வசூலைக் குவித்த படங்களில், 'ஜவான்' படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள், 'ஜெயிலர்' படம் 2 மணி நேரம் 49 நிமிடம், 'லியோ' படம் 2 மணி நேரம் 44 நிமிடம் என நீளமான படங்களாகவே இருந்தன. அவற்றையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு 'அனிமல்' படம் 3 மணி நேரம் 21 நிமிடங்களாக இருந்தது.