டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

2023ம் ஆண்டு கடைசி மாதமான டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் டிசம்பர் 1ம் தேதி 5 படங்களும், டிசம்பர் 8ம் தேதி 5 படங்களும் வெளியாகின. அவற்றுடன் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 220ஐ நெருங்கியுள்ளது.
அடுத்து வரும் டிசம்பர் 15ம் தேதி சுமார் 8 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. “அகோரி, ஆலம்பனா, பைட் கிளப், கண்ணகி, பாட்டி சொல்லை தட்டாதே, சபாநாயகன், ஸ்ரீ சபரி ஐயப்பன், தீதும் சூதும்” ஆகிய 8 எட்டு படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவையனைத்துமே வளரும் நடிகர்கள், சிறிய பட்ஜெட் படங்கள்தான்.
கடந்த இரண்டு வாரங்களாகவே தியேட்டர்களுக்கு அதிக ரசிகர்கள் வராத நிலையில் வரும் வாரம் இத்தனை படங்கள் வெளியாக உள்ளன. முன்னணி நடிகர்கள் படங்கள் வந்தால் மட்டுமே தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் சிறிய படங்களை நோக்கி அதிகம் வருவதில்லை. இந்த டிசம்பர் மாதத்தில் முன்னணி நடிகர்கள் படங்கள் எதுவுமே வரப் போவதில்லை என்பது கூடுதல் தகவல்.




