அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் |
மகிழ்திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கடந்த சில தினங்களாக ஒரு செய்தியை சோசியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
குறிப்பாக, பருத்திவீரன் பட விவகாரத்தில் சூர்யா- அமீருக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதால் அமீருடன் இணைந்து வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா மறுத்து விட்டதாகவும், அதனால் அப்படத்தில் அஜித் நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து வெற்றிமாறன் தரப்பில் விசாரித்த போது, வாடிவாசல் என்பது சூர்யாவுக்காகவே உருவாக்கப்பட்ட கதை. இந்த படத்துக்காக அவர் மாடு பிடித்தல் உள்ளிட்ட சில பயிற்சிகளை எடுத்திருக்கிறார். அதோடு இந்த படத்தில் இயக்குனர் அமீரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விடுதலை -2 படப்பிடிப்பு முடிந்த பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித் குமார் நடிக்கப் போகிறார் என்று வெளியாகி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என்கிறார்கள்.