96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா |

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிகராக தனது 25வது படமான 'கிங்ஸ்டன்' எனும் படத்தில் நடித்து வருகிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடிக்கிறார் . இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேர்லல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாக உருவாகிறது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கப்பல் அரங்கம் அமைத்து நடத்தி வந்தனர். இப்போது இதன் படப்பிடிப்பு கடலில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் கடலில் உள்ள மர்மத்தை தேடி செல்லும் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிறார்கள்.




