ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' படம் 5 வருடங்களுக்கு பிறகு கடந்த 24ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு முடியாததாலும், கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி பிரச்னையாலும் படம் வெளிவரவில்லை. தற்போது வருகிற 8ம் தேதி வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு பார்வை. நிறைய கனவு. உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவையே பேப்பரில் இருந்த 'துருவ நட்சத்திரம்' கதையை இன்று திரைப்படமாக கொண்டு வந்துள்ளது. அனைத்தும் எங்களுக்கு எதிராக இருந்தபோதும் கூட, எங்களது கனவும், அர்ப்பணிப்பும்தான் இந்த திரைப்படத்தை விரைவில் உங்களுக்காக திரையரங்குகளில் கொண்டு வர உதவப் போகிறது.
படம் நவ.24 அன்று திரைக்கு வரும் என்று நாங்கள் அறிவித்தபோது, அதனை சாத்தியமாக்க நாங்கள் மலைகளை நகர்த்த முயற்சித்தோம். எங்களால் அந்த தேதியில் படத்தை வெளியிட முடியாமல் போனது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை என்று சொன்னால் நாங்கள் கூறுவது பொய் ஆகிவிடும். நாங்கள் படத்தை கைவிடவில்லை என்று பார்வையாளர்களுக்கு உறுதிப்படுத்தவே இந்த அறிக்கை.
எங்களது சக்திக்கு உட்பட்டும், மீறியும், இந்த தடைகளை கடந்து, படத்தை திரைக்குக் கொண்டு வர அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறோம்.
இந்த இறுதி கட்டத்தை நோக்கி நாங்கள் செல்லும்வேளையில், எங்களது படைப்பை உங்களிடம் பகிரும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் இப்படம் வெளிச்சத்தை காணும்”.
இவ்வாறு கவுதம் மேனன் கூறியுள்ளார்.