''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக தற்போது சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் இருக்கிறார். நேற்று இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு வந்து சங்கத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை 22 லட்சம் வரை மோசடி நடந்துள்ளதாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது : தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் கடந்த 55 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 2018ம் ஆண்டு முதல் இந்த சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, நான் செயல்பட்டு வருகிறேன். சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் சங்க உறுப்பினர்களை ஏமாற்றி பணம் கையாடலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் போலியான சங்கம் ஒன்றை ஆரம்பித்து, தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டனர். அவர்கள் போட்டி சங்கம் நடத்துவதற்கும், உண்மையான சங்கத்தின் பெயரை பயன்படுத்துவதற்கும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, உரிய தடை ஆணை பெறப்பட்டுள்ளது.
ஆனால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். போலியான ஆவணங்களை காட்டி, தொடர்ந்து சங்க உறுப்பினர்களிடம் பணத்தை பெற்று, சங்கத்தின் கணக்கு உள்ள வங்கியில் செலுத்தாமல், லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். உறுப்பினர்கள் கட்டிய பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டதாக வங்கி பெயரிலும் போலியான ரசீதுகளை தயாரித்து கொடுத்து ஏமாற்றி உள்ளனர். 22 லட்சம் அளவுக்கு அவர்கள் மோசடி செய்தது, ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் உண்மையான கணக்கில் 6 கோடி பணம் உள்ளது. அந்த பணத்தையும் மோசடி செய்யும் நோக்கில் செயல்படுகிறார்கள். சங்க ஊழியர்களையும், உறுப்பினர்களையும் மிரட்டி தொல்லை கொடுக்கிறார்கள். எனக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே உரிய விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, சங்கம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் ஜாக்குவார்தங்கம் தெரிவித்துள்ளார்.