இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! | பின்னணி குரல் கொடுத்த கார்த்திக்கு நன்றி தெரிவித்த '3பிஹெச்கே' இயக்குனர் | 'டைட்டானிக்' ரிலீஸ் : தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைக்கும் கலையரசன் | 2025ன் அரையாண்டில் தமிழ் சினிமா வசூல் எவ்வளவு? | கோலிவுட்டில் அதிரடிக்கு தயாராகும் பீஸ்ட் நடிகை | கூடைப்பந்து வீராங்கனை டூ நடிகை: பன்முகத்திறனுடன் வைஷாலி | ஹாலிவுட் ரேஸ் படங்களில் நடிக்க விரும்பும் அஜித்குமார் |
பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ். இவருக்கு இந்திய அரசின் சார்பில் சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டது. கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதற்காக இந்தியா வந்த மைக்கேல் டக்ளஸ் கோவா பட விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசினார்.
திரைப்பட விழா நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற மைக்கேல் டக்ளஸ் பேசியிருப்பதாவது: இந்த திரைப்பட விழாவில் 78 நாடுகள் பிரநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே இந்த விழாவின் தனித்துவம் மற்றும் அழகு என கருதுகிறேன். இது உலக அளவில் புகழ்பெற்று தாக்கம் செலுத்தும் இந்தியப் படங்களின் பிரதிபலிப்பு. இந்தியா சிறந்தவர்களின் கரங்களில் இருப்பதாக நினைக்கிறேன். அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளாக திரைப் படங்களின் தயாரிப்பு மற்றும் நிதியுதவிக்கு அதிக பணம் செலவிடப்பட்டதை அறிகிறேன். இது இந்திய படங்களுக்கு வெற்றிகரமான காலகட்டம்.
இவ்வாறு அவர் பேசினார்.