மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படம் கடந்த வாரம் வெளியாகும் என்று அறிக்கப்பட்டிருந்த நிலையில் படம் வெளியாகவில்லை. நாளை டிசம்பர் 1ம் தேதியாவது வெளியாகும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
விரைவில் படத்தை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என கவுதம் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அந்த 'விரைவில்' என்பதற்கான காலக்கெடு என்று எதையும் சொல்லாமல் தவிர்த்துவிட்டார். அது அடுத்த வாரமாவது இருக்கலாம், அல்லது அதற்குப் பிறகாவது இருக்கலாம்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 'எமகாதகன்' பட விழாவில் பேசிய தயாரிப்பாளரும், வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே ராஜன், 'துருவ நட்சத்திரம்' படம் பற்றிப் பேசினார். அப்படத்திற்காக 60 கோடி ரூபாய்க்கு திரைப்பட கூட்டமைப்பில் புகார் உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்காக 25 கோடி வரை கடன் கொடுத்து படம் வெளியாகக் காரணமாக இருந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ஆனால், அந்தப் பணத்தை கவுதம் இன்னமும் திருப்பித் தரவில்லை என்றும் கூறினார்.
60 கோடி ரூபாய் பஞ்சாயத்து முடிந்தால்தான் படம் திரைக்கு வருமா அல்லது நீதிமன்ற வழக்கு முடிந்தால் படம் திரைக்கு வருமா என்பது போகப் போகத்தான் தெரியும்.