‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' படத்தை ஹிந்தியில் வெளியிடுவதற்காக தணிக்கை செய்ய சென்றபோது அதற்கு 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக விஷால் தணிக்கை அதிகாரிகள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மத்திய அரசின் உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் புகார் கொடுத்த விஷாலை நேற்று மும்பை சிபிஐ அதிகாரிகள் அழைத்திருந்தனர். அதன்படி சிபிஐ முன் ஆஜரான விஷால், அவர்களிடம் தன் தரப்பு விளக்கத்தையும், தான் வைத்திருந்த ஆதாரங்களையும் வழங்கினார். விஷாலின் மானேஜ் ஹரி கிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதுபற்றி விஷால் வெளியிட்ட பதிவில், ‛‛சிபிஐ வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பையில் ஆஜரானேன். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. விசாரணை நடத்தப்படும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. சிபிஐ அலுவலகம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அறிந்து கொண்டேன். இந்த அலுவலகத்திற்கு செல்வேன் என்று என் வாழ்நாளில் நான் நினைத்ததில்லை. ரீல் வாழ்க்கையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக நிற்க முன்வர வேண்டும்,'' என்றார்.