ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? |

டிமான்டி காலனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. தொடர்ந்து இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். அவர் இயக்கத்தில் கடைசியாகப் வெளிவந்த ' கோப்ரா' திரைப்படம் தோல்வி அடைந்தது . இதனால் அவர் பல விமர்சனங்களுக்கு ஆளானார். தற்போது 'டிமான்டி காலனி 2' படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இதைத்தொடர்ந்து அவர் அடுத்து ஹிந்தியில் நடிகர் அஜய் தேவ்கனை வைத்து படம் இயக்க அழைப்பு வந்ததாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர் .




