ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் அன்னபூரணி. இப்படத்தில் அவருடன் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா உள்பட பலர் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ள இந்த படம் டிசம்பர் ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்று ஆசைப்படும் நயன்தாரா, தனது பெற்றோரிடம் எம்பிஏ படிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு, சமையல்கலை படித்து வருகிறார். விஷயம் பெற்றோருக்கு தெரியும்போதும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாரா அசைவ உணவுகள் சமைக்கும் தகவல்கள் வெளியாகும்போதும் அவரது குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. இது போன்ற பல பிரச்சனைகளை கடந்து இந்த துறையில் நயன்தாரா எப்படி சாதனை செய்கிறார் என்பதுதான் இந்த அன்னபூரணி படத்தின் கதையாகும்.
டிரைலரில், தெருவுல கிரிக்கெட் விளையாடும் எல்லோரும் சச்சின் ஆக முடியாது. பஸ் கண்டக்டரா இருக்கிற எல்லோருமே சூப்பர் ஸ்டார் ஆகிட முடியாது என்று நயன்தாராவின் அம்மாவாக நடித்திருக்கும் ரேணுகா பேசும் டயலாக்கும், புடிச்சதை பண்ணினா லட்சத்துல ஒருத்தர் இல்ல, லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார் ஆயிடலாம் என்று நயன்தாரா பேசும் வசனமும் இந்த கதைக்கு அழுத்தம் சேர்ப்பதாக அமைந்துள்ளன.