ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. மாறுபட்ட கதைகள், கதாபாத்திரங்கள் என அவருடைய படங்களுக்கு தென்னிந்திய ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம். அவர் நடித்துள்ள 'ஹை நான்னா' படம் வரும் டிசம்பர் 7ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று நானி கலந்து கொண்டு பேசினார். அப்போது விரைவில் ஒரு தமிழ் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளேன். அது பற்றிய அறிவிப்பை இப்போது வெளியிட முடியாது. சீக்கிரமே வெளியிடுவோம் என்றார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'நான் ஈ' படத்திற்குப் பிறகு நானி, நேரடியாக எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. தான் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்தால் அதை தெலுங்கு ரசிகர்கள் தமிழ்ப் படம் போல நினைக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் தெலுங்குப் படம் போல பார்க்கிறார்கள். 'பாகுபலி, காந்தாரா' போன்ற படங்கள் வந்த பிறகு நடிகர்கள் யார் என்பதைப் பார்ப்பதில்லை. கதை என்னவென்றுதான் பார்க்கிறார்கள். அதனால்தான் நல்ல கதை உள்ள படங்களில் நடித்து வருகிறேன். நான் தெலுங்குப் படங்களில் நடித்தாலும், அவை கண்டிப்பாகத் தமிழிலும் வெளியாகும்,” என்றார்.