'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க, பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கப்பட்டு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்துடன் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 21வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால் வரப்போகிற பொங்கல் தினத்தில் தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கப் போகிறார் சிவகார்த்திகேயன்.