காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல் படி மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக நேற்று அவர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். “த்ரிஷாவை ஒரு நடிகையாக மதிக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்கவில்லை. என் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் விசாரணையில் தெரிவித்தேன்” என்றார் மன்சூர் அலிகான்.
வழக்கு பதிவுக்கு முன்பு வரை நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறி வந்த மன்சூர் அலிகான் இப்போது மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு!
ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!
காவல் அதிகாரி அம்மையார் த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!
எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.