திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
உலக திரைப்படங்களை தர மதிப்பீடு செய்யும் தளம் ஐ.எம்.டி.பி. இந்த தளம் திரைப்படங்களை, வெப் தொடர்களை, டிவி தொடர்களை, திரைப்படம் தொடர்பான நட்சத்திரங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தர நிர்ணயம் செய்யும். 200 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை கொண்டு இதனை அது தீர்மானிக்கிறது. தற்போது 2023ம் ஆண்டுக்கான இந்திய தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு இரண்டு வெற்றிப் படங்களில் நடித்த (பதான் மற்றும் ஜவான்), ஷாரூக்கான் முதலிடத்தை பெற்றுள்ளார். ஹாலிவுட் திரில்லர் திரைப்படமான 'ஹார்ட் ஆப் ஸ்டோன்' படத்தில் நடித்த ஆலியா பட் 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளிவிட்டு 10வது இடத்தை பிடித்துள்ளார் விஜய் சேதுபதி, நயன்தாராவுக்கு 5வது இடமும், தமன்னாவுக்கு 6வது இடமும் கிடைத்துள்ளது.
முழு பட்டியல்:
1. ஷாரூக்கான்
2. ஆலியா பட்
3. தீபிகா படுகோன்
4. வாமிக்கா காபி
5. நயன்தாரா
6. தமன்னா பாட்டியா
7. கரீனா கபூர் கான்
8. சோபித்தா துலிப்பாலா
9. அக்ஷய் குமார்
10. விஜய் சேதுபதி
'ஐ.எம்.டி.பி' நிறுவனம் ஒரு வணிக நிறுவனம்; அதன் தர மதிப்பீடுளும் வணிக நோக்கம் கொண்டவை என்ற விமர்சனமும் உண்டு.