'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பலரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் சிபி ஏற்கனவே குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்த 'வஞ்சகர் உலகம்' படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார், 'மாஸ்டர்' படத்தில் விஜய்யின் மாணவர்களில் ஒருவராக நடித்தார். தற்போது புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை கிரவுன் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எம்.இப்ராஹிம் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் பிரகாஷ் கிருஷ்ணன் இயக்குகிறார்.
சிபியுடன் குஷிதா கல்லப்பு, பருத்திவீரன் சரவணன், ஜெயபிரகாஷ் மற்றும் நிரோஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கிறார்கள். பாபு தமிழ் வசனம் எழுத, கோபி கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கேபர் வாசுகி இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.