ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது |

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் விஸ்காம் துறையின் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனை பல்கலைகழத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் வழங்கினார். விழாவில் எஸ்.ஏ.சியின் மனைவி ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னையில் அரசு பணியில் வேலைக்கு சேர்ந்தார். எம்.ஜி.ஆர் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் மூலம் சவுண்ட் என்ஜினீயரான இவர் பின்னர் டி.என்.பாலுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். 1981ம் ஆண்டு 'சட்டம் ஒரு இருட்டரை' படத்தின் மூலம் இயக்குனரானார். அதன்பிறகு 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். பாலிவுட் படங்களும் இயக்கி உள்ளார். பல படங்களில குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். டூரிங் டாக்கீஸ், டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தனது மகன் விஜய்யை தனது தயாரிப்பு படங்களில் நடிக்க வைத்து ஹீரோவாக்கினார். இப்போது அவர் முன்னணி நடிகராக இருக்கிறார்.