பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய நாவல் 'குற்றப் பரம்பரை'. 18வது நூற்றாண்டில் தமிழகத்தில் 89 சாதிகள் குற்றப் பரம்பரையினர் என வெள்ளையர்கள் குற்றப் பரம்பரை சட்டம் மூலம் அறிவித்தனர். ராமநாதபுரத்தைக் கதைக் களமாகக் கொண்ட இக்கதையில் அந்த சாதியினரின் வாழ்வியல் பற்றிய நாவலாக இருந்தது.
வேல ராமமூர்த்தி எழுதிய இந்த நாவலை மையமாக வைத்து இயக்குனர் பாலா திரைப்படமாக்க முயன்றார். இயக்குனரும், கதாசிரியருமான ரத்னகுமார் சேகரித்து வைத்த தரவுகளின் அடிப்படையில் இயக்குனர் பாரதிராஜாவும் இதைப் படமாக்க பிரம்மாண்ட பூஜை எல்லாம் நடத்தினார். அந்த சமயத்தில் பாலாவுக்கும், பாரதிராஜாவுக்கும் மோதல் எழுந்தது. ஏட்டிக்குப் போட்டியாக பத்திரிகையாளர் சந்திப்புகளை எல்லாம் நடத்தினார்கள்.
தற்போது இயக்குனரும், நடிகருமான சசிகுமார் இந்த 'குற்றப்பரம்பரை'யை வெப் சீரிஸ் ஆக உருவாக்க முயற்சித்து வருகிறார். பாரதிராஜாவிடம் பேசி அனுமதியும் வாங்கிவிட்டாராம். ஆனால், ரத்னகுமார் அதற்கு சம்மதிக்கவில்லை என்கிறார்கள். நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடரும் எண்ணத்தில் இருக்கிறாராம். அவரையும் எப்படியாவது சமாதானம் செய்த பின் வெப் சீரிஸை ஆரம்பிக்கலாம் என இப்போது கிடப்பில் போட்டுவிட்டார்களாம்.
ஒரு கதையை படமாக்குவதற்குள் எத்தனை சீரியஸ் சிக்கல்கள்.




