காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
பியார் பிரேமா காதல், தாராள பிரபு, இஸ்பெட் ராஜா போன்ற காதல் படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண், தற்போது ‛பார்க்கிங்' என்ற படத்தில் 30 வயது குடும்ப தலைவனாக நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் ராம்குமார் இயக்கி உள்ளார். நாம் அன்றாடம் சந்திக்கும் கார் பார்க்கிங் பிரச்னையைச் மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தபடம் டிசம்பர் 1ல் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் பேசும்போது, ‛‛கொரோனா காலக்கட்டத்தில் எழுதிய கதை. கார் வைத்திருக்கும் பலரும் சந்திக்கும் பிரச்னை தான் இந்தபடம். சில உண்மை சம்பவங்களும் உள்ளன. மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள், காரை காரா பாருங்க உயிரா பார்க்காதீங்க என்று சொல்லும் கதை,'' என்கிறார்
ஹரிஷ் பேசும்போது, ‛‛நிறைய காதல் படங்களில் நடித்து விட்டேன். இந்த படத்தில் 30 வயது இளைஞனாக, ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் குடும்ப தலைவனாக வருகிறேன். லப்பர் பந்து, டீசல் என்று ஆக்ஷன் கதைகளில் என்னை அடுத்தடுத்து பார்க்கலாம். ஒரேமாதிரி காதல் கதைகள் தவிர்த்து வேற வேற கதைகளுடன் வருகிறேன்'' என்கிறார்
ஹரிஷ் ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். கர்ப்பிணியாக படத்தில் அவர் வருகிறார். பட தலைப்பு போலவே பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த இந்துஜா பார்க்கிங்கில் அவரது காரை நிறுத்த அவதிப்பட்டார். இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், ஹரிஷ் கூட்டணி சிறப்பாக வந்துள்ளதாக பட குழுவினர் தெரிவித்தனர்.