பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி | ஏவிஎம் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | பிளாஷ்பேக்: 2 முறை படமான நல்ல தங்காள் கதை | ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? |

தீபாவளிக்கு நான்கு படங்கள் மோதினாலும் நான்குமே டாப் வசூல் நடிகர்களின் படங்களாக வெளியாகவில்லை. அவற்றிலும் இரண்டு படங்களுக்கு மட்டுமே எதிர்பார்ப்புகள் இருந்தன. அதனால், அவர்கள் இருவரும் பெரும்பாலான தியேட்டர்களை பங்கு போட்டுக் கொண்டார்கள். பெரிய சிக்கல் எதுவும் எழவில்லை.
ஆனால், பொங்கலுக்கு நிலைமையே வேறு. சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்', தமன்னா நடிக்கும் 'அரண்மனை 4' ஆகிய படங்களை பொங்கலுக்கு வெளியிடுகிறோம் என முதலில் அறிவித்தார்கள். அதன்பின் அந்த போட்டியில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம்' படமும் சேர்ந்து கொண்டது. ஒரு படத்திற்கு 300 தியேட்டர்கள் என அவர்கள் பங்கு போட வசதியாக இருந்தது. எனவே, அந்த மும்முனைப் போட்டியை யாரும் பெரிதாக நினைக்கவில்லை.
இந்நிலையில் டிசம்பர் வெளியீட்டிலிருந்து தள்ளி வைத்து பொங்கலுக்கு வருகிறோம் என 'கேப்டன் மில்லர்' பட வெளியீட்டையும் அறிவித்தார்கள். இந்த திடீர் போட்டியில் இப்போது நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல், வசூலில் தாமதம் ஏற்படலாம். இந்த போட்டியிலிருந்து யார் விலகப் போகிறார்கள் என்பதுதான் இப்போது கேள்வியாக உள்ளது.
'லால் சலாம், அரண்மனை 4' ஆகிய இரண்டு படங்களையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. எனவே, அவர்களே 'அரண்மனை 4' படத்தைத் தள்ளி வைப்பார்கள் என கோலிவுட்டில் பேசப்படுகிறது. அல்லது அவர்கள் அழுத்தம் கொடுத்தால் 'அயலான், கேப்டன் மில்லர்' ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒன்று தள்ளிப் போகலாம். இந்த முக்கிய முடிவை எடுக்கப் போவது யார் என இப்போதே கோடம்பாக்கத்தில் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.