ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… | ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர் |

லவ் டூடே படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற பிறகு பிரதீப் ரங்கநாதன் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதனை முதலில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கின்றார்.
இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கின்றார் என ஏற்கனவே வெளியான தகவலைத் தொடர்ந்து இப்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், பிரதீப் ரங்கநாதன் என மூன்று இயக்குனர்களை ஒரே படத்தில் வைத்து விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




