டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், திடீரென பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக அறிவித்தனர். பொங்கலுக்கு வருகிறோம் என ஏற்கெனவே, 'அயலான், அரண்மனை 4, லால் சலாம்' ஆகிய படங்களை அறிவித்திருந்தார்கள்.
அந்தப் படங்களுக்கே தியேட்டர்களை பிரித்துக் கொடுப்பதில் தடுமாற்றம் நிலவி வரும் சூழலில் தற்போது 'கேப்டன் மில்லர்' படமும் அந்தப் போட்டியில் வந்துள்ளது. இது முன்னர் அறிவித்தவர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். 'அயலான்' படத்தை ஏற்கெனவே தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்து பின் பொங்கலுக்குத் தள்ளி வைத்தார்கள். அப்படம் கடந்த சில வருடங்களாக படமாக்கப்பட்டு இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படம் பொங்கலுக்கு வராது, தள்ளிப் போகலாம் என ஒரு தகவல் வெளியானதால்தான் 'கேப்டன் மில்லர்' படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்தார்களாம். ஆனால், அன்றைய தினத்தில் படம் வந்தே ஆக வேண்டும் என ஐஸ்வர்யா முடிவெடுத்து வேலைகளை முடுக்கி விட்டாராம். அதனால்தான், டீசர் பற்றிய அறிவிப்பும் வெளியாகியது என்கிறார்கள்.
இப்போது நான்கு படங்கள் போட்டியிட உள்ள சூழலில் எந்தப் படமாவது வெளியீடு தள்ளிப் போகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.




