'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
இந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் மூலமாக, குறிப்பாக அதில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு ஆடிய நடனம் மூலமாக இன்னும் மிகப்பெரிய அளவில் தனது ரசிகர் வட்டத்தை விரிவாக்கி உள்ளார் நடிகை தமன்னா. அதுமட்டுமல்ல முதல் முறையாக பாந்த்ரா என்கிற படத்தில் நடிப்பதன் மூலம் மலையாளத் திரையுலகிலும் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக திலீப் நடித்துள்ளார். ஏற்கனவே ராம்லீலா என்கிற வெற்றி படத்தை திலீப்பிற்கு கொடுத்த இயக்குனர் அருண்கோபி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். தீபாவளி ரிலீஸ் ஆக இன்று (நவ-10) இந்த படம் வெளியாகி உள்ளது.
இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் திலீப், “இந்த படத்தின் கதையை முழுவதும் உருவாக்கியதுமே கதாநாயகி பாத்திரத்தில் இதுவரை மலையாள சினிமாவில் நடித்திராத ஒருவரும் அதேபோல இதுவரை தனக்கு ஜோடியாக நடித்திராத ஒருவரும் நடித்தால் புதிதாக இருக்கும் என விரும்பினோம். அந்த அளவிற்கு கட்ஸ் கொண்ட இந்த கதாபாத்திரத்திற்கு தமன்னா பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. ஆனால் அவர் நடிப்பாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் அருண்கோபி எப்படியோ தமன்னாவிடம் கதையை கூறி அவரின் சம்மதத்தை வாங்கி விட்டார். படத்தின் பூஜையன்று தமன்னா கலந்து கொள்ளும் வரை எனக்கு அவர் இதில் நடிக்கிறார் என்கிற நம்பிக்கையே இல்லை.
அது மட்டுமல்ல இந்த படத்தின் தமன்னா தவிர இன்னொரு முக்கிய பெண் கதாபாத்திரம் ஒன்றும் உள்ளது. அதற்காக பல நடிகைகளை அணுகியபோது தமன்னா இந்த படத்தில் நடிப்பதால் தாங்கள் நடித்தால் பெரிய அளவில் வெளியே தெரிய மாட்டோம் என நினைத்து அவர்கள் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்தனர். அதன்பிறகு நடிகை மம்தா மோகன் தாஸ் துணிச்சலாக அந்த இன்னொரு கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார் திலீப்.