தென்னிந்திய சினிமா தான் 'பெஸ்ட்', ஹிந்தியில் 'ஸ்லோ': ஷ்ரத்தா தாஸ் | கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு | இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' |

சந்திரமுகி- 2 படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்த படம் நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜிகர்தண்டா -2 படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராகவா லாரன்ஸ்.
அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், இதற்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்த அசால்ட் சேது வேடத்தில் முதலில் என்னை தான் நடிப்பதற்கு அழைத்திருந்தார். அப்போது நான் வேறு சில படங்களில் பிசியாக இருந்ததால் என்னால் நடிக்க இயலவில்லை என்று கூறியுள்ள ராகவா லாரன்ஸ், ரஜினி குறித்த இன்னொரு தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அது என்னவென்றால், ஏற்கனவே நான் நடித்த காஞ்சனா- 2 படத்தில் ரஜினியைதான் ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்காக அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருந்தபோதுதான் அந்த படத்தில் ஒரு சீனில் ஹீரோ, தனது தாயின் இடுப்பில் உட்காருவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சி அந்த கதைக்கு பொருத்தமாக இருந்தாலும் ரஜினி சார் அதுபோன்ற காட்சி நடித்தால் அது செட் ஆகாது என்பதினால் அந்த முடிவில் இருந்து பின் வாங்கி நானே நடித்து விட்டேன். இல்லையென்றால் காஞ்சனா -2 படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடித்திருப்பார் என்று ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.