ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் | ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்தி விஜய் சாதனை | கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் | ‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை | பிளாஷ்பேக்: வேஷமிட்டு வாய்ப்பைப் பெற்ற ஜெமினிகணேசன் | டிசம்பர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் ; உற்சாகத்தில் ராஷ்மிகா |
ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 25வது படமாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிரிம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. தொடர்ந்து டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.
இத்திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தாலும் ரிலீஸ் தேதியை குறிப்பிடாமல் இருந்தனர். தற்போது இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் சென்சாரில் கிடைத்ததாக அறிவித்து கூடுதலாக இப்படம் நவம்பர் 10ம் தேதி அன்று வெளியாகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளனர்.